Thursday, October 27, 2011

என்னை எதிர்க்கக்கூட எனது முகம்தான் தேவைப்படுகிறது” vijay

வேலாயுதமும் தோலுரியும் பதிவர்களும். 

thanks to:sirakuhal

முற்குறிப்பு: இப்படியான ஒரு பதிவை எழுத நான் விரும்பியதில்லை. எழுத வைத்துவிட்டார்கள். ஆனால் இதுவே முதலும் கடைசியுமான பதிவாக இருக்கும்.

எழுதியதற்கு காரணம் நான் விஜய் ரசிகன். விஜயை ரசிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. என் ரசனையை ஒருவன் கிண்டலடிக்கும்போது கோபம் வருவது இயல்பே. அதுவும் விதண்டாவாதமாய் கிண்டலடிக்கும்போது கோபம் வருவது நியாயமானதும் இயல்பானதும். ஏனெனில் நான் யார் ரசனையையும் கிண்டல் செய்யவில்லை. தலயிட்டதுமில்லை. சில இடங்களில் வரம்பு மீறியிருக்கிறேன். மீறியிருக்கிறேன் என்பதைவிட மீற வைத்திருக்கிறார்கள்.


இங்கு நான் வக்காலத்து வாங்குவது விஜய் என்ற தனி மனிதனுக்காக இல்லை. “விஜய்” என்ற நடிகனுக்காக.



--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்றைய தினமே வெளியாகி சக்கை போடு போடுகிறது வேலாயுதம். யார் என்ன சொன்னாலும் உண்மை அதுதான்.

இப்போது நான் விமர்சனம் எழுத வரவில்லை. அதைத்தான் ஏற்கனவே பலர் எழுதிவிட்டார்களே. இப்போது வேலாயுதம் பதிவுலகில் புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பி விட்டிருக்கிறது.

பல பதிவர்கள் வேலாயுதத்தில் எங்கெல்லாம் பிழை பிடிக்க முடியுமோ தேடிப்பிடித்து ஊதிப்பெருப்பித்து விமர்சனம் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள்.


வேலாயுதம் வெற்றி பெறக்கூடாது என்பதுதான் பலரது ஆசையாக இருந்தது. ஆசையாக மட்டுமன்றி அது ஒரு வெறியாக இருந்தது. காரணம் விஜய் இல்லாவிட்டால் பல பதிவர்களே இல்லை என்பதுதான். விஜயை வைத்துத்தான் பலரது பதிவுகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. விஜய் மறுபடியும் வெற்றி பெற்றுவிட்டால் பலர் கடையை பூட்டிவிட்டு கிளம்பவேண்டியதுதான். அந்த வேகத்தில் மனதில் பட்டதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

வேலாயுதம் வெளியாகும் முன்பே பல பிரபல பதிவர்கள் போட்ட Status மற்றும் கொமண்ட்ஸ் வேலாயுதம் தோற்கும் என்பதே. அதிலும் தன்னை நடுநிலையாக காட்டிக்கொள்ளும் பதிவர் ஒருவர் “தீபாவளிக்கு வேலாயுதம் ரிலீஸ் ஆவதால் இப்போதே தலைவலி “ என்று ஒரு Status போட்டிருந்தார். அப்போதே எனக்கு தெரியும் அவரது விமர்சனம் எப்படி வரும் என்று. அதனால் அவர் பக்கமே போகவில்லை. அவர் விமர்சனம் எழுதினாரா என்று கூட தெரியாது.

அதுபோலத்தான் சிலர் வேலாயுதம் தோற்கும் என்று ஆரூடம் கூறினார்கள். அது பொய்த்துப்போகவே அதை சரிசெய்யும் வகையில் ”படம் பரவாயில்லை ரகம்” என்று விமர்சனம் எழுதுகிறார்கள்.
காவலன் வெளியாகிய போதும் இந்த பிரச்சினை லேசாக தலைகாட்டியது. சிலர் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் வகையில் எழுதியிருந்தார்கள். அப்போதே அவர்களின் பயம் ஆரம்பித்துவிட்டது. இப்போது இன்னும் மெருகேறியிருக்கிறது.

இப்போது விஜயை வைத்து பதிவுபோடாத பிரபல பதிவர்களை காட்டமுடியுமா (ஒரு சிலரை தவிர). விஜயை கிண்டலடித்து பதிவுபோட்டால்தான் பிரபல பதிவராகலாம் என்பது தமிழ் பதிவுலகின் எழுதப்படாத விதி. ஆனால் அப்படியல்லாமல் பிரபலமானவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்கள் எழுத்தை மட்டுமே நம்பி எழுதுபவர்கள். ஹிட்சை நம்பி எழுதுபவர்கள் அல்ல.

இப்படி விஜயை கலாய்த்து எழுதும் ஒரு பதிவருடன் தொலைபேசியில் கதைத்தபோது அவர் சொன்னார் “ எனக்கு விஜயை பிடிக்கும், ஆனா பதிவில கலாய்ச்சுத்தான் எழுதிறனான்” என்றார். ஏன் என்று கேட்டா ஹிட்ஸ் பிச்சிக்கிட்டு போகுமாம். உண்மையும் அதுதான். அதற்காக ஹிட்ஸ் என்று எதையும் எழுதலாமா?

இன்னும் ஒரு சிலர் வேலாயுதம் கன்றாவியாம் என்று கவிதை எழுதுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் முதல்நாளே கூட்டத்தில் அடிபட்டு டிக்கட் எடுத்துத்தானே படம் பார்த்திருக்கிறார்கள். அப்படி பார்த்துவிட்டு கிண்டல் வேறு. விஜயை பிடிக்கவில்லை என்றால் வேறு படத்துக்கோ அல்லது தம் வேலையை பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதானே? எதுக்காக போய் பார்க்கனும்.


அதிலும் பலர் முன்னரே தீர்மாணித்து வைத்துவிட்டார்கள் என்ன எழுதுவது என்று. 

அடுத்தவிடயம் பலரும் விஜயை கிண்டலடிப்பது விஜய்க்கு நடிக்கத்தெரியாதாம். நடிக்கத்தெரியாமலா ரஜனிக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கிறார். ஒரு விடயத்தை நானும் ஒத்துக்கொள்கிறேன். சோகமான நடிப்பு விஜய்க்கு கொஞ்சம் சரிவராதுதான். அப்படி பார்க்கப்போனால் தமிழ் சினிமாவில் யார் நடிக்கிறார்கள். அஜித்துக்கு கொமடி, ரொமான்ஸ் வராதே. அது போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் சரிவராமல் இருக்கும். அப்படியானால் அவர்களும் நடிகர்கள் இல்லைத்தானே. அவர்களையும் கிண்டலடித்து பதிவு போடலாம்தானே. அக்‌ஷனோ, கொமடியோ, ரொமான்ஸோ அனைத்திலும் விக்ரம், ரஜனி,சூர்யாவை தவிர வேறு யாராலும் அசத்த முடியாது.  அதிலும் ரஜனியை தவிர ஏனையவர்களுக்கு கொமடி கொஞ்சம் வீக்.

இன்று தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக இருப்பவர் விஜய் என்பதை விரும்பியோ விரும்பாமலோ எல்லோரும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். அதேபோல் வசூலில் ரஜினியை எட்டக்கூடிய இடத்தில் இருப்பவரும் விஜய் ஒருவர்தான்.


அதுபோல அதிகமான ரசிகர்களை கொண்டவரும் விஜய்தான்.


இதேபோல் நண்பர் ஒருவரின் பதிவில் “இணையத்தளங்களில் அதிகமாக அடிபடும் ஒரே பெயர் விஜய் தான்” என்பதற்கு கருத்து சொன்ன இன்னொரு “விஜயை பிடிக்காத” நண்பர் கூறியிருந்தார் “ சாம் ஆண்டர்சனின் பெயர்கூடத்தான் பிரபலமாக அடிபடுகிறது என்று.


என்ன ஒரு விளக்கம்!!??? இதற்கு விளக்கம் சொல்ல நான் இன்னும் அவரளவிற்கு இறங்கி வரவில்லை.


இத்தனைக்கும் அவர் ஒரு சிறந்த திறமையுள்ள பதிவர். தன் விருப்பு வெறுப்புக்களை காட்டுவதற்கு எவ்வளவு கீழிறங்கி வந்துவிட்டார்.


அடுத்தது விஜயின் தோல்விப்படங்கள் பற்றிய கிண்டல். யார்தான் தோல்விப்படங்கள் கொடுக்கவில்லை. நடிகர்திலகம் சிவாஜிகூடத்தான் தோல்விப்படம் கொடுத்தார். தோல்வியடையும் என்று தெரிந்தால் யாருமே அப்படத்தில் நடிக்கப்போவதில்லை. இவர்கள் படத்தை கிண்டல் செய்தால் கூட பரவாயில்லை. அதை சாக்காக வைத்து விஜயை அல்லவா கிண்டல் செய்கிறார்கள்.

காரணம் அவர்களுக்கு வெறுப்பு விஜய் படங்கள் மேல் அல்ல. விஜய் மீதுதான். விஜய் தோற்கவேண்டும். அவரை வைத்து பதிவெழுதி நாம் ஹிட்ஸ் வாங்கவேண்டும் என்பதே அவர்களின் அவா..

இதில் சிலர் வெளிப்படையாகவே கூறியிருந்தார்கள் “பதிவெழுத சரக்கு காலியாகும்போதெல்லாம் விஜய்தான் கைகொடுக்கிறார்” என்று. அதிலிருந்தே தெரிந்தது அவர்களெல்லாம் எதற்கு இப்படி எழுதுகிறார்கள் என்று.

இதெற்கெல்லாம் காரணம் பதிவுலகின் வால்பிடி அரசியல். யார் என்ன சொன்னாலும் நீங்க சொன்னதுசரி.. நல்லது.. நியாயம் என்று வால் பிடிக்க எழுதியவரும் உச்சம்கொப்பில் ஏறிவிடுவார். வால்பிடி அரசியல் என்று பதிவுலகில் இருந்து மறைகிறதோ அன்றுதான் பதிவுலகம் உருப்படும்.

இப்போதே ஒரு சொல்லிக்கொள்கிறேன். பலரின் நண்பன் விமர்சனம் எப்படி இருக்கும் தெரியுமா?


”கதை நன்று விஜய் சொதப்பல், ஷங்கருக்காகவும் இலியானாவிற்காகவும் பார்க்கலாம்”

----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சிறு கதை. ஒருநாள் கிருஸ்னன், தருமனிடம் ஒரு கண்ணாடியை கொடுத்து இதில் பார்த்தால் உன்னை அதிகமாக நேசிப்பவர்கள் தெரிவார்கள் என்றானாம். தருமனும் பார்க்க அதில் சகுனியின் முகம் தெரிந்ததாம். கலவரப்பட்ட தருமனை நோக்கி “தருமா! சகுனி உன்னை அழிக்கவேண்டும் என்ற நினைவில் இரவுபகலாக உன் நினைவிலேயே இருப்பவன். அதனால் அவன் தான் உன்னை அதிகமாக நினைக்கிறான் என்று கிருஸ்னன் சொன்னானாம்.. ஹி ஹி றிப்பீட்டு
..............................................................................................................................................
இவ்விடத்தில் விஜய் சொன்ன ஒரு விடயத்தை நினைவுபடுத்துகிறேன் “ என்னை எதிர்க்கக்கூட எனது முகம்தான் தேவைப்படுகிறது

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேலாயுதம் கில்லியோடு ஒப்பிடுமளவிற்கு இல்லாவிட்டாலும் இப்போது வந்த படங்களில் முன்னிலையில் இருப்பதுதான் உண்மை.

அதிகம் அலட்டல் இல்லாத நடுநிலையான விமர்சனம் படிக்க

No comments:

Post a Comment

my blog recent