Monday, October 24, 2011

ரத்தத்தின் ரத்தமே - உடன்பிறப்பே!




ரத்தத்தின் ரத்தமே - உடன்பிறப்பே!

-பாடலாசிரியர் அண்ணாமலை பேட்டி


 ரத்தத்தின் ரத்தமே - உடன்பிறப்பே!
’’,   ‘’ஜில்லாக்ஸ்’’ என்று வேலாயுதம் படத்தின் பாடல்கள் எல்லா எஃ.எம்&களிலும் மாறி மாறி ஒலிக்கின்றன.

  இந்த இரண்டு பாடல்களையும் எழுதிய கவிஞர் அண்ணாமலையிடம், அந்தப் பாடல்கள் உருவான விதம் பற்றிக் கேட்டோம்.


‘‘ இதற்கு முன்பு விஜய் சாருக்கு நான் எழுதியஎன் உச்சி மண்டையிலபாடல் பெரிய வெற்றி பெற்றது. எனவே, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சார் இந்தஜில்லாக்ஸ்பாடலை என்னிடம் எழுதக் கொடுத்தபோதே, ‘உச்சி மண்டை பாடல் அளவுக்கு இதுவும் ஹிட் ஆகவேண்டும்.  வித்தியாசமாக எழுதுங்கள்!’ என்றார்.



விஜய்க்கு ஹன்சிகா துலானி மயக்க மருந்து கலந்து கொடுப்பார். அதைக் குடித்ததும் விஜய் அரை மயக்கத்தில் ஹன்சிகாவைப் பார்த்துப் பாடத் தொடங்குவார். நெத்தியடியானகுத்துப் பாடலாக இது வரவேண்டும்!’ என்று இயக்குநர் ராஜா சார், இந்தப் பாடலின் சூழலை என்னிடம் விளக்கினார்.


அதைக் கேட்டதும் நான் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? ஹன்சிகாவின் விதவிதமான போட்டோக்களை எல்லாம் நெட்டில் தேடித் தேடிப் பார்த்ததுதான். மஞ்சளில் செதுக்கிய சிலை போல இருந்தார். அப்புறன் என்ன? ‘மஞ்சநத்தி மரத்துக் கட்டஎன்று முதல் வரியைத் தொடங்கினேன்.


 மயக்கமருந்து தந்தவுடன் பாடுவது போல வரும் காட்சி அமைப்புக்காக, அடுத்த வரியில், ‘மைய வெச்சி மயக்கிப்புட்டஎன்று போட்டேன். அடுத்து,ஹன்சிகாவைப் பார்க்கிறபோதே, ‘நாட்டுக் கட்ட டவுனு கட்ட, ரெண்டும் கலந்த செம்ம கட்டஎன்று எல்லோருக்குமே தோன்றுவது இயல்புதானே!  இப்படி, ஹன்சிகாவின் போட்டோவை வைத்து உருவான பாடல்தான் இது.


விஜய் ஆண்டனி சார் சில பாடல்களில் டைலாமோ, நாக்கு முக்க போல வித்தியாசமான வார்த்தைகளைச் சேர்த்துப் பாடலை ஹிட் செய்யும் உத்தியைக் கையாள்வார்.  அதன்படி இதில், ‘ஜில்லாக்ஸ்என்ற வார்த்தையைச்சேர்த்தார்.


அதனால்தான் இந்தப் பாடல் இப்போது ஒரு வயதுக் குழந்தை முதல் அனைவருக்கும் பிடித்த பாடலாக ஆகி இருக்கிறது. இந்தப் பாடலை முதல் முறை கேட்டபோதே விஜய், ராஜா சாருக்கெல்லாம் மிகவும் பிடித்தது. இப்போது எல்லோருக்கும் பிடிக்கிறது.


அடுத்து, இந்தப் படத்தில் இடம் பெறும்ரத்தத்தின் ரத்தமேபாடல்தான் எனக்கு சவாலாக அமைந்தந்து. ஏனெனில், ‘அண்ணன் தங்கை பாசத்தைஉணர்த்தும் வெற்றிப் பாடல்கள் திரைப்படங்களில் மிகவும் குறைவு. அதனால், இதை எப்படியாவது ஹிட் செய்தே ஆகவேண்டும் என்று நினைத்துதான் ரொம்பவும் யோசித்து, ‘ரத்தத்தின் ரத்தமேஎன்ற எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வார்த்தையை முதல் வரியாக எழுதினேன்.



அந்த வார்த்தை ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த வார்த்தை என்பதால், மக்களிடம் அது எளிதாக சென்று சேரும் என்று எதிர்பார்த்தேன். அதே நேரத்தில் ஒரு தங்கையை நோக்கி அண்ணன் சொல்வதற்கும் அதைவிட பொருத்தமான வேறு வார்த்தை என்ன இருக்கிறது! அடுத்த வரியாகஎன் இனிய உடன்பிறப்பேஎன்று கலைஞர் சொல்லும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.


 அதுவும் அண்ணன் தங்கை பாசத்துக்கு மிகவும் பொருத்தமான வார்த்தைகள். மேலும், விஜய் சாருக்கு இந்த இரண்டு பெரிய கட்சிகளிலுமே ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதால், அதுவும் இந்தப் பாடலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.


இந்தப் பாடலில் வரும், ‘செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவாஎன்கிற வரிகளை விஜய் ஆண்டனி சார் நான் எழுதிய நொடியிலேயே வெகுவாக ரசித்துப்பாராட்டினார்.

விஜய் சாருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் என்று அவர் மூலம் நான் அறிந்தபோது,பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். படத்தின் சூழலையும் தாண்டி எல்லா விஜய் சார் ரசிகர்களும் என்றென்றும்ரசிக்கும் பாடலாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.


எந்தப் பாடல் என்றாலும், கூர்மையாக யோசித்து நேர்மையாக உழைத்து எழுதினால் அதை நிச்சயம் பெரிய வெற்றிப் பாடலாக மாற்ற முடியும் என்பதை நான் எப்போதும் நூறு சதவிகிதம் நம்புகிறேன்!’’ என்று தன்வேலாயுதம்படப் பாடல் அனுபவத்தைச் சொல்லிமுடித்தார், பாடலாசிரியர் அண்ணாமலை.

No comments:

Post a Comment

my blog recent