வேலாயுதமா? 7ம் அறிவா? தீபாவளி ரேசில் ஜெயிக்கப்போகும் குதிரை எது?
பல படங்கள் வருவதாக இருந்த இந்த தீபாவளிக்கு கடைசியில் தமிழ் நாட்டின் அனைத்து தியேட்டர்களும் இரு பெரிய திரைப்படங்களுக்கு ஒதுக்கப்பட மற்றைய படங்கள் தானாக விலகி கொண்டன.. விஜய் நடித்த வேலாயுதமும் சூர்யா நடித்த 7ம் அறிவு போட்டி போட்டுகொண்டு தியேட்டர்களை புக் பண்ண ஆரம்பித்திருகின்றன. தற்போதைய காலத்தில் முதல் வார ஒபெநிங் வசூலையே படங்கள் நம்பி இருகின்றன எனவே அதிக தியேட்டர்களை பிடிக்கும் படமே அதிக வசூலை அள்ளும்.
சூர்யா, சுருதிகாஷன் நடித்து முருகதாஸ் இயக்கத்தில் 84 கோடி செலவில் வெளிவரும் சயன்ஸ் பிச்சர் 7ம் அறிவு. விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம் நடித்து ராஜா இயக்கத்தில் 45 கோடி செலவில் வெளிவரும் பக்கா கமெர்சியல் படம் வேலாயுதம்.
தமிழ் நாட்டில் பெரிய தியேட்டர் களை ஒவ்வொன்றாக பார்த்து உதயநிதி தன்
படமான 7ம் அறிவுக்கு புக் பண்ண வேலாயுதம் படத்திற்கு அடுத்த படியான
தியேட்டர்களே கிடைத்திருகிறது. இதனால் முற்பதிவு பாதிக்கபட்டிருகிறது.
ஆனாலும் அனைத்து காம்ப்ளெக்ஸ் களிலும் வேலாயுதம் திரையிடப்டுகிறது.
சென்னையில் ஆரம்பத்தில் 38 தியேட்டர் களை பெற்றிருந்த வேலாயுதம் இன்று
மேலும் 12 திரைகளை பெற்று 50கு முன்னேறி இருக்கிறது. இது இன்னும்
அதிகரிக்க வாய்ப்பிருகிறது.
7ம் அறிவுக்கு இதுவரை சென்னையில் 52 தியேட்டர்கள்
கிடைத்துள்ளது. இதற்க்கான முற்பதிவுகள் மூன்று நாட்களுக்கு முதல்
ஆரம்பித்து முதல் 2,3 நாட்களுக்கான டிக்கெட் விற்றுதீந்து விட்டது.
வேலாயுதம் முற்பதிவுகள் வார இறுதியில் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.
சில தியட்டர்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டன. ஆனால் 7ம் அறிவு போல சூடு
பிடிக்கவில்லை.
சென்னை தவிர்ந்த ஏனைய இடங்களிலும் இரண்டு படத்துக்கும் ஆன
போட்டி ஆரம்பித்துவிட்டன. 7ம் அறிவுக்கு தெலுங்கு பதிப்புடன் சேர்த்து 1100
பிரிண்ட் உலகம் முழுவதும் போடப்படுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி
தெரிவித்துள்ளார். சூர்யா+ முருகதாஸ் கூட்டணிக்கு கஜனி என்ற வெற்றிப்படம்
கொடுத்ததால் எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. , வேலாயுதம் படம்
கேரளாவில் 120 தியேட்டர் களிலும் கர்நாடகாவில் 100 திடேர்களிலும் மொத்தமாக
1300 பிரிண்ட் உலகம் முழுவதும் போடப்படுள்ளதாக படத்தை வெளியிடும்
அயிங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.. இது விஜய் படத்திற்கு புதிய சாதனை.
காவலனுக்கு கிடைத்ததை விட இது இருமடங்காகும். தொடர்ந்து ஹிட் படம் கொடுத்த
ராஜா படத்தை இயக்கியிருப்பதாலும், விஜய் இப்போது கதையில் கவனம் செலுத்த
ஆரம்பித்திருப்பதாலும் ஒரு வருடத்திருக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்த
வேலாயுதம் படத்திக்கு எதிர்ப்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் உள்ளது.
ஐரோப்பாவில் , இங்கிலாந்தில், அமெரிக்காவில் 7ம் அறிவை விட
வேலாயுதத்திற்கு அதிக தியட்டர்கள் கிடைத்துள்ளது. இலங்கையில் 13 திரைகளில்
வேலாயுதம் திரையிடப்படுகிறது. இது இன்னும் அதிகரிக்கலாம். தீபாவளிக்கு 2
நாட்கள் முந்தியே ஸ்பெஷல் ஷோ போடப்படுவது இதுவே உலகில் முதல் முறை.
தீபாவளி ரேசில் ஜெயிக்கப்போகும் குதிரை எது என்று மூன்று நான்கு நாட்களில் தெரிந்து விடும்.
No comments:
Post a Comment