Sunday, October 16, 2011

kaadhal kavithai

நீ..


உன்னை வருத்தமடைய செய்யும் ஒவ்வொரு நாளும்

என் வாழ்வின் கருப்பு தினங்கள்…




உன் சோகங்களை நீ என்னிடம் பகிர்ந்துகொள்ள

மறுக்கும் கணங்களே..

நம் உறவின் மரண நிமிடங்கள்..




காற்றிலே உன் குரல் கலந்து வருகையில் இந்த உலகமே

எனக்கு ஏனோ ஊமையாய் தோணுதடி..




என் கண்ணீர் துளிகளுக்கும்,கவிதை வரிகளுக்கும்


காரணம் நீ மட்டும் தானடி..



kaadhal kavithai

உன் கண்ணீர் துளிகளை துடைக்கும்போது தான்

எனக்கு அழுகையே..




உன் மேல் நான் கோபம் கொள்ள எத்தனையோ

காரணங்கள் இருப்பினும்,உன்னை விட்டு நான்

விலகாதிருக்க ஒரே காரணம்..

நீ..


நீ என்னிடம் விளக்கம் கேட்கும் நாளே நீ

என்னை விட்டு விலக ஆரம்பிக்கும் நாள்..



எனக்கான உந்தன் கோபத்தில் தெரிகிறது

என் மீதான உன் காதல்..


நீ என்னை விட்டு போ என்று தான் சொன்னாயே தவிர..

நீ  ஏன் என்னை விட்டு விலகி செல்லவில்லை..


உன்னைப்பார்த்த அந்த கணமே என் வாழ்வின்

மிகப்பெரிய விபத்து..எனினும் எனக்கு அந்த காயங்கள்

ஏனோ மிகவும் பிடிக்கிறது..

No comments:

Post a Comment

my blog recent