Thursday, October 20, 2011

ரெண்டு பேரும் ஜெயிப்போம்!


ரெண்டு பேரும் ஜெயிப்போம்! - Thalapathy Vijay's Interview in Ananda Vikatan

நம்ம படத்தைப் பத்தி நாமளே ரொம்பப் பேசக் கூடாதுங்ணா. இந்தப் படத்துக்கு அப்புறம் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு இயக்குநர் ராஜாவுக்கு வரும். பெரிய இயக்குநர்கள் இன்னும் நம்பி என்னை ஃபிக்ஸ் பண்ணுவாங்க!'' - கண்களில் தொக்கி நிற்கும் டிரேட் மார்க் புன்னகையுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் விஜய்.

... ''ஷங்கர் - விஜய் காம்பினேஷன் சந்தோஷம்... எப்படி வந்திருக்கு 'நண்பன்’?''

''ஷங்கர் சார் என் அப்பாகிட்ட அசிஸ்டென்டா இருந்தப்பவே பழக்கம்தான். அப்பப்போ அவர்கிட்ட பேசி இருக்கேன். ஆனா, இன்னைக்கு இருக்குற ஷங்கர் வேற. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் பிளான் பண்ற மெத்தட் சிம்ப்ளி சூப்பர்ப்!

ஷங்கர் சார் படத்தில் ஈஸியா நடிச்சிடலாம். ஏன்னா, அவரே நடிச்சுக் காட்டிருவார். அவர் இன்னைக்கு இந்திய அளவில் பிரபலமான டைரக்டர். அந்தப் பேர் சும்மா வந்தது இல்லை. என்னைக் கேட்டா, அவரை 'இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்’னு சொல்வேன். நான் எப்பவோ அவரோட இயக்கத்தில் நடிச்சிருக்க வேண்டியது. ஆனா, வேற வேற காரணங்களால் தள்ளிப்போச்சு. இப்போ கச்சிதமா செட் ஆகி இருக்கு. 'த்ரீ இடியட்ஸ்’ இந்திப் படம் மொழி எல்லை எல்லாம் தாண்டி இந்தியாவையே வசீகரிச்சது. அதை இன்னும் அழகேத்தி உருவாக்கி இருக்கிறார் ஷங்கர் சார்!''

''ஜீவா, ஸ்ரீகாந்த்கூட ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா?''

''ஜீவா ரொம்ப ஜாலி. டேக்குக்குப் போற அந்த விநாடி வரை கமென்ட் அடிச்சுட்டே இருப்பார். அவர் ஸ்பாட்ல இருந்தா யூனிட்டே சந்தோஷமா இருக்கும். ஸ்ரீகாந்த் முன்னாடியே எனக்கு ஃப்ரெண்ட்தான். இப்ப இன்னும் க்ளோஸ் ஆயிட்டார். சத்யராஜ் சார்கிட்ட நிறையப் பேசிக்கிட்டே இருந்தோம். நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாகப் பழகினது ஃப்ரே மில் நல்லாவே தெரியும். நல்ல கதையில் இப்படி ஒரு டீமோட நடிச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்போ ஷூட்டிங் முடிஞ்ச தும் எங்க டீமை நான் ரொம்ப மிஸ் பண்றேன்!''

''கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க எப்படித் தயார் ஆகிட்டு இருக்கீங்க..?''

''பொது நண்பர் ஒருத்தர் மூலம் தான் கௌதம் மேனன் என்னை இயக்க ஆசைப்படுவதுபத்தித் தெரிஞ்சுக் கிட்டேன். சந்திச்சோம். அவர் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. இங்கேயும் அமெரிக்கா விலும் நடக்கும் கதை. கௌதம் படம் எப்பவும் ஸ்டைலிஷா இருக்கும். 'யோஹன்’ படத்துக்காக என் லுக், பாடி லாங்குவேஜ்னு எல்லாத்தையும் டியூன் பண்ணிட்டு இருக்கேன். அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போறேன். இப்படி ஷங்கர், முருகதாஸ், கௌதம்னு காம்பினேஷன் அமையுறது நல்ல விஷயம்!''

''உங்க படமும் உங்க நண்பர் சூர்யா நடிச்ச படமும் ஒண்ணா தீபாவளிக்கு வருதே?''

''ஆமா. ரெண்டு படங்களும் ஜெயிக்கணும்னு ரெண்டு பேரும் நினைப்போம். ரெண்டு யூனிட்டும் ஜெயிக்கிறதுக்கு என்னோட வாழ்த்துகள்ண்ணா!'

No comments:

Post a Comment

my blog recent