அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
"ஷாரூக் ரா -ஒன் பாட்டுல தே.மு.தி.க. துண்டு போட்டுருக்காருங்க... அடுத்த மீட்டிங்ல, உங்களைப் பார்த்துதான் படத்துக்கு பேரு 'ரா' வா வச்சிருக்காங்கன்னு சொல்லிடறேன்..."
"வேலாயுதத்தை கலாய்ச்சி இந்நேரம் கோடிக்கணக்குல எஸ்.எம்.எஸ் பறந்துருக்கும்.. 100 எஸ்.எம்.எஸ் தான் ஒருநாளைக்கு அனுப்பனும்னு நல்ல நேரமா பார்த்து சட்டம் போட்ட டிராய் மவராசனுங்களா உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப தேங்க்ஸ்பா..."
"பிராணாப்பும் ப.சிதம்பரத்துக்கும் மோதலாம்.. இல்ல நான் கேக்குறேன்.. ஒரு வேஷ்டி கிழிப்பு இல்ல, ரத்தம் வரல, அடிதடி வெட்டுக்குத்து இல்ல.. இதெல்லாம் ஒரு மோதலாய்யா.... தமிழக காங்கிரஸ் பேர கெடுக்குறதுக்குன்னே மொன்னையா அடிச்சிக்கிறாங்க..."
"அய்யா மவராசா.. ஆபத்து வருதுய்யா... தமிழ்நாட்டை காப்பாத்துங்கய்யா.. "
"என்ன செய்யனும் சொல்லுங்க தாயி..."
"கூடங்குளம் திட்டத்தையும், கூடவே உங்க பையன் நடிக்க வராராமுல அதையும் தடுத்து நிறுத்துங்க சாமி.... எங்க உசுர காப்பாத்துங்க சாமி...."
No comments:
Post a Comment