Thursday, October 20, 2011

சினிமா உலகில் விஜய் ஆரம்பித்துள்ள புதுப் பழக்கம்!

சினிமா உலகில் விஜய் ஆரம்பித்துள்ள புதுப் பழக்கம்!20 oct 2011

தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் தங்களது படங்களை வெளியீட்டுக்கு முன்பு புரமோட் செய்வதற்காக ஒவ்வொரு நகரங்களுக்கும் செல்வார்கள். சமீபத்தில் அமிதாப் பச்சன் நடித்த 'ஆரக்ஷன்' படத்திற்காகவும், ஷாருக் கான் 'ரா ஒன்' படத்திற்காகவும் இந்தியா முழுக்க முக்கிய நகரங்களுக்குச் சென்று தங்களது படங்களை புரமோட் செய்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்தப் பழக்கம் தமிழ் திரையுலகில் இல்லை. முதன்முதலாக நடிகர் விஜய் தான் நடித்த 'வேலாயுதம்' படத்தை புரமோட் செய்ய ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் 'வேலாயுதம்' படத்தின் புரமோஷனுக்காக பெங்களூரு சென்றார். அங்கே விஜய்க்கு ரசிகர்கள் தடபுடலான வரவேற்பு அளித்து எக்கச்சக்கமாக கூடியிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே 'வேலாயுதம்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டு வந்திருக்கிறார், விஜய்.

இது ஒரு நல்ல அறிகுறியே... இதே போல் பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நடித்து முடித்ததோடு வேலை முடிந்துவிட்டது என்று அக்கடான்னு ரெஸ்ட் எடுக்க வெளிநாடு செல்லும் நடிகர்களுக்கும் விஜய் மாதிரி தாங்கள் நடித்தப் படத்துக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் சரி.

No comments:

Post a Comment

my blog recent