Sunday, October 16, 2011

தேர்தல் வந்துருச்சு... : உள்ளாட்சியில் ஒரு நல்லாட்சி தரவேண்டிய கடமையை மறக்காமல் செய்யுங்கள் மக்களே என்று சிறுவன் முரசு கொட்டிச் செல்கிறானோ..



   posted on 16 oct 2011
  • ஓட்டுதான் வேணும்... : உள்ளாட்சி தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்த வேட்பாளரை,ராமர் வேடமிட்டவர் ஆசீர்வாதம் செய்ய,அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சாமி. இப்போதைக்கு மறக்காம ஓட்டுப்போடுங்க என்கிறார். இடம்:கிழக்கு சென்னை படம்:எம்.திருப்பதி.

  • தேடவேண்டும்... : பொதுவாக ரயில் நிலையத்தில் ஆட்கள் காணாமல் போனால் தேடுவார்கள், ஆனால் அடிக்கடி இருளில் முழ்கிவிடுவதால் தாம்பரம் ரயில் நிலையத்தையே தேடவேண்டியுள்ளது. இடம்:சென்னை படம்: சி.மாரியப்பன்

  • தக, தக நோட்டு... : பழங்கால ரூபாய் நோட்டு தொடர்பாக நடந்துவரும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள தங்க ஆயிரம் ரூபாய் நோட்டு. இடம்:சென்னை படம்:கே.சிவா

  • ரம்யமான காட்சி... : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மஞ்சூர் அருகே உள்ள போர்த்தி ஹாடா நீர் பிடிப்பு பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இடம்:ஊட்டி,மஞ்சூர் படம: ஒய்.ஜே.ரகு

  • ஓட்டுகேட்கும் சிறார்... : குழந்தை குடும்பத்துடன் கோயிலுக்கும்,ஊருக்கும் போய்க்கொண்டு இருந்த குடும்பத்தினர் இப்போது ஓட்டு கேட்டு வேனில் பயணம் செய்கின்றனர்.ஆளுக்கு இவ்வளவு என்று ரேட் இருப்பதால் இவர்களுக்கும் ஒரு ரேட் உள்ளது போலும். இடம்:சென்னை படம்: சோ.சத்யசீலன்

  • ரோஷமுள்ள மக்கள்... : ஒரு கிராமத்தில் உள்ள வாக்காளர்களைக் கவர, நள்ளிரவில் வீட்டிற்குள் தூக்கிபோடப்பட்ட சேலைகளை,அந்த கிராம மக்கள் ஏற்காமல் நடுரோட்டில் கொண்டுவந்து போட்டுவிட்டு போய்விட்டனர்.மக்கள் திருந்திவிட்டனர், ஆனால் இந்த அரசியல்வாதிகள்தான் திருந்தாமல் உள்ளனர். இடம்:உடுமலை படம்:சதிஷ்குமார்

  • தேர்தல் வந்துருச்சு... : உள்ளாட்சியில் ஒரு நல்லாட்சி தரவேண்டிய கடமையை மறக்காமல் செய்யுங்கள் மக்களே என்று சிறுவன் முரசு கொட்டிச் செல்கிறானோ... இடம்:சென்னை படம்:கே.சிவா

  •  
    பையனுக்கு தெரியுமா... : திடீர் தீவிபத்து ஏற்பட்டால் எப்படி செயல்படுவது என்று தீயனைப்பு வீரர்கள் ஒத்திகை பார்த்தனர்.அப்போது சிறுவன் ஒருவனை காப்பாற்றுவது போன்ற ஒத்திகை நடைபெற்றது.இது ஏதுமறியாத சிறுவன் கண்களில் மட்டும் ஒரிஜினலாகவே பயம்,பதட்டம்,கலக்கம் காணப்பட்டது. இடம்:புதுச்சேரி படம்:பாலாஜி

  • சுகமான சுமை... : பாய் வியாபாரம் செய்யும் இவர்,வியாபராத்திற்கு துணையாக இருக்கும் தன் மனைவியை பாயின் மீது உட்காரவைத்து கொண்டு செல்கிறார்.பயணம் சொகமாக இருந்து பிரயோசனம் இல்லை,வியாபாரம் சொகமாக இருக்கவேண்டுமே... இடம்:சென்னை படம்:எம்.ராஜேஷ்

  • மழையில் "சூரியன்''... : உள்ளாட்சி தேர்தல் உபயமாக ,ஊட்டியில் வாக்காளர்களுக்கு வாரி வழங்கப்பட்டவைகளில் குடைக்கு பிரதான இடம் உண்டு.குடை கொடுத்த நேரம் மழையும் பெய்யவே,மழையில் ஆங்காங்கே "சூரியன்''தான். இடம்: ஊட்டி, படம்:ஒய்.ஜே.ரகு'

No comments:

Post a Comment

my blog recent