பக்கத்தில் ஒரு நயாகரா
விஷயங்களில் அருவியும் ஒன்று. அதிலும் நயாகரா மாதிரி பிரமாண்டமான
நீர்வீழ்ச்சியை பார்ப்பதே சுகம். அப்படி ஒரு நீர்வீழ்ச்சி நமது அண்டை மாநிலம்
கேரளாவில் உள்ளது. தமிழ் சினிமாவிலும் நிறையவே நடித்துள்ளது.
கொச்சியிலிருந்து சுமார் 75 கி.மீ.
தூரத்தில் உள்ள சாலக்குடியில் உள்ள இந்த அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியை
வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. போய் பார்த்தால் தான் புரியும். கிட்டத்தட்ட 80 அடி உயரத்திலிருந்து பிரமாண்டமா தண்ணி கொட்டுற அழகை பார்த்துக்கிட்டே இருக்கலாம்.
கேரளாவிற்கே உரித்தான கிளைமேட்டும், தண்ணியும் ( நல்ல தண்ணியை சொன்னேன்) அதிரம்பள்ளிக்கு போனவுடனே
குஷியாயிடும். இந்த அருவியின் இன்னொரு Special நாம் போய் சேரும் இடமே அருவியின் உச்சி தான். குளிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப்பட்டு தான் இறங்க வேண்டும்.
வைரமுத்து சொன்னது போல் 'வீழ்வதில்
அழகு அருவி மட்டும் தான்' என்பதை அதிரம்பள்ளி போய் பார்த்தால் புரிந்து
கொள்ள்லாம். புன்னகைமன்னன் படத்தில் வரும் 'என்ன சத்தம்' பாடல் எடுத்த
இடம் என்று சொன்னால் எளிதில் விளங்கும். (அவ்வளவு அழகான இடத்தில
எடுக்க வேற சீனே கிடைக்கலயா?) நம்மூரு ஆட்டோவில எழுதியிருக்கிற
மாதிரி அங்க ஒரு போர்டை மாட்டனும்.
"அழகை ரசி, அடைய நினைக்காதே"
No comments:
Post a Comment