Friday, September 30, 2011

புத்தகங்கள் மத்தியில் அரவாண் இசை வெளியீடு : 4தமிழ்மீடியா பிரத்தியேக செய்தி

புத்தகங்கள் மத்தியில் அரவாண் இசை வெளியீடு : 4தமிழ்மீடியா பிரத்தியேக செய்தி


அரவாண் படம் பதினைந்தாம் நூற்றாண்டு மதுரையை கதைகளமாகக் கொண்டு உருவாகியுள்ளது. மதுரையைச் சேர்ந்த பேராசிரியரான சு.வெங்கடேசன் எழுதியிருக்கும்

 இரண்டாண்டாயிரம் பக்க வரலாற்று ஆவண நாவல் ‘காவல் கோட்டம்’. இந்த நாவல் 1500 ஆண்டு மதுரையின் வரலாற்றைப் பேசுகிறது. இந்தநாவலில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அரவான் திரைக்கதையை அமைத்து இருகிறார் வசந்தபாலன்.
விக்ரம் - அமீர் புதிய விருது நிகழ்வில்
ஸ்ருதி ஹாசனின் புதிய படங்கள்
இஸ்டம் : படங்கள்
ஏழாம் அறிவு ஆடியோ ரிலீஸ் படங்கள்
மயக்கம் என்ன ஆடியோ ரிலீஸ்
நடிகை ப்ரணீதா சாரியில் படங்கள்
மயக்கம் என்ன படங்கள்
விஜய் டிவி சுப்பர் சிங்கர் வின்னர் படங்கள்
காவல் கோட்டம் நாவலாசிரியர் சு.வெங்கடேசனும் உரையாடல் ஆசிரியராக இந்தப் படத்தில் பணிபுரிந்திருகிறார். ஆதி, பசுபதி, தன்ஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்
இந்தபடத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது.
இந்நிலையில் இந்தபடம் பிறந்து தமிழ்நாட்டின் வரலாற்று ஏடுகளின் ஒரு பகுதியில் இருந்து என்பதால் வரலாற்றுப் புத்தகங்களுக்கு மத்தியில் அரவான் இசையை வெளியிட முடிவு செய்திருகிறார் இயக்குனர் வசந்தபாலன்.
புத்தகங்கள் நிறைந்த இடம் என்றால் அது நூலகம். அதுவே ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக இருந்தால் எப்படியிருக்கும்?! கடந்த திமுக அரசின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஆண்ணா நூற்றாண்டு நூலகம். எட்டுமாடிக்கட்டிடத்தில் நான்கு லட்சம் சதுர அடி பரப்பளவில் 12 லட்சம் பன்மொழிப் புத்தகங்களோடு தொடங்க பட்ட தமிழர்களின் சாதனை லேண்ட் மார்க்காக, சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா பலகலைகழக வளாகத்தை ஒட்டி அமைந்து இருகிறது.
பார்வையற்றவர்களுக்காக மட்டும் இரண்டு லட்சம் பிரைல் முறை புத்தகங்கள் இங்கு சேமிக்கப்பட்டு தனிபிரிவு இயங்குகிறது. இந்த நூலகத்தில்தான் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி மாலை ஆறுமணிக்கு அரவாண் இசை வெளியீடு நடக்க்கிறது. அரவான் இசையை வரலாற்று பேரராசிரியர்கள் வெளியிட இருகிறார்கள் என்கிறது அரவான் விபரம் அறிந்தவர்கள்.

No comments:

Post a Comment

my blog recent