தீபாவளிக்கு இன்னும் 26 நாட்களே உள்ளன. கோடம்பாக்கத்தில் பெரிய கதாநாயகர்கள் படங்களை தீபாவளி பண்டிகையில் ரிலீசுக்கு கொண்டு வர இரவு பகலாக விறுவிறுப்பான வேலைகள் நடக்கின்றன
. விஜய்யின் வேலாயுதம் சூர்யாவின் 7-ஆம் அறிவு. தனுசின் மயக்கம் என்ன ஆகிய மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இப்படங்களுக்கான வியாபாரம் ஜரூராக நடக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள மெஜாரிட்டி தியேட்டர்களை இந்த மூன்று படங்களும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதோடு பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் “ரா ஒன்” படத்தையும் தமிழில் டப்பிங் செய்து தீபாவளிக்கு வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. கடந்த 2007-ல் தீபாவளியன்று இது போல் விஜய்யின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல், தனுசின் பொல்லாதவன் படங்கள் மோதின.
அப்போது இருந்ததை விட இப்போது 3 நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் பெருகியுள்ளது. வியாபாரமும் உலக அளவில் விரிந்துள்ளது. எனவே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 7-ம் அறிவு படத்தில் சூரியா ஜோடியாக ஸ்ருதி, நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. சீனாவில் தற்காப்பு கலையை அறிமுகம் செய்த போதி தர்மர் என்ற தமிழரை பற்றிய கதையே இப்படம்.
வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஜெனிலியா என இரு ஜோடிகள் கிராமத்தில் பிறந்த சாதாரண இளைஞன் படிப்படியாக உயர்ந்து தலைவனாவதே கதை. ராஜா இயக்கியுள்ளார். மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடி ரிச்சா. செல்வராகவன் இயக்கியுள்ளார். இது அடுத்த தலைமுறைகதை என்று சுருக்கமாக சொன்னார் செல்வராகவன்.
No comments:
Post a Comment