Friday, September 30, 2011

vedi vimarsanam

காவல் துறையில் ஐ.பி.எஸ், பதவியில் இருக்கும் விஷால் (பிரபாகரன்), சிறு வயதில் தொலைத்து விட்ட தன் தங்கையை தேடி, தூத்துக்குடியிலிருந்து கல்கத்தாவிற்கு போகிறார். அதற்கு முன்பு தூத்துக்குடியில் தாதாவாக வலம் வரும் ஷாயாஜி ஷிண்டேவை அடித்து, உதைத்து சிறைக்கு அனுப்பி விட்டு கல்கத்தாவிற்கு போகிறார்
. சிறுவயதில் வறுமையின் காரணமாக, தன் தங்கையாவது நன்றாக இருக்கட்டுமே என்று மிஷினரி ஒன்றில் சேர்த்து விட்டுப் போகும் விஷாலின் மனதை புரிந்து கொள்ளாமல் அவரை வெறுக்கிறார் அவரது தங்கையான பூனம் கௌர்.

ஜெயிலில் இருந்து வெளியே வரும் ஷாயாஜி ஷிண்டே, கல்கத்தாவில் இருக்கும் விஷாலின் தங்கையைப் பற்றி அறிந்து கொண்டு, அங்கே தன் படை பரிவாரங்களுடன் வருகிறார். பூனம் கொளரின் தோழியாக வருகிறார் சமீரா ரெட்டி. தங்கையை சந்திக்க வரும் விஷால் மீது காதல் கொள்கிறார் சமீரா. இதனிடையே கல்கத்தா வரும் ஷாயாஜி ஷிண்டே, அங்கே உள்ள லோக்கல் ரவுடியுடன் சேர்ந்து கொண்டு, விஷாலின் தங்கையையும், சமீராவையும் சிறைபிடிக்கிறார்.
விஷாலோடு அவரது தங்கை சேர்ந்தாரா? சமீராவின் நிலை என்ன? வில்லன்களின் கதி என்ன? என்பதை நீங்களே யூகித்து விடும் அளவிலான கிளைமாக்ஸை சொல்லி படத்தை முடித்திருக்கிறார்கள் இடையிடையே பஞ்சதந்திரக் கதைகளில் வரும் கதைக்குள் கதை என்பது போல, பிளாஷ் பேக்கிற்குள் ஒரு பிளாஷ்பேக் சொல்லி தலை சுற்ற வைக்கிறார்கள். திடீர் திடீரென்று அடியாட்கள் வருகிறார்கள். டிஷ்யூம் டிஷ்யூம் என பின்னணி ஒலி காதை பிளக்க, சண்டை நடக்கிறது.
இப்படம் தெலுங்கில் 2008-ல் வெளிவந்த சவுரியம் படத்தின் தமிழ் ரீமேக். இப்படத்தை விஷாலின் அண்ணன் தயாரித்திருப்பதால் விஷாலின் ஆட்டம் அதிகமாகவே இருக்கிறது. அடிக்கடி சண்டை போடுகிறார். அவ்வப்போது சமீராவுடன் ஆடிப் பாடுகிறார். என்ன ஒரு கூடுதல் அம்சம் என்றால், அவன் இவன் படத்திற்குப் பிறகு விஷாலிற்கு நடிக்க வருகிறது என்பதுதான். சண்டை காட்சிகளில் நன்றாகவே செய்திருக்கிறார்.
விஷாலின் தங்கையாக வரும் பூனம் கௌரை சுற்றித்தான் இப்படமே என்பதால் ஊறுகாய் போன்று பயன்பட்டிருக்கிறார் சமீரா ரெட்டி. கதாநாயகன் என்றால் கண்டீப்பாக ஒரு கதாநாயகி வேண்டும் என்ற சினிமா மரபுக்கு வந்து செல்வது போல் இருக்கிறார் சமீரா. பூனம் கௌர் நன்றாக நடித்திருக்கிறார். அவர் கண்டீப்பாக தமிழ் கதாநாயகிகளின் வரிசையில் விரைவில் இடம்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
காமெடிகுக விவேக் வருகிறார். இவரும் இல்லையென்றால் படத்தில் உட்காரவே முடியாதோ என தோன்றுகிறது. சிக்ஸ் பேக் மத்தவங்களுக்கு எனக்கு 8 பேக்ஸ் என்று சொல்லிக் கொண்டு, வயிற்றில் பலூன்களை கட்டிக் கொண்டு திரியும் விவேக்கை பார்த்து பலர் பயம் கொள்கின்றனர். உண்மையை அறியும் விஷால், சாதாரண ஊசியைக் கொண்டு விவேக்கை பணிய வைப்பது கலகலப்பூட்டுகிறது.
மருத்துவராக வரும் ஊர்வசி தன் பங்கிற்கு தனது படபடவென பேச்சிலும், வெகுளித்தனமான நடிப்பிலும் கலகலப்பூட்டுவது மட்டுமின்றி, மனதிலும் நிற்கிறார். ஷாயாஜி ஷிண்டே வில்லனுக்கேற்ற நடிப்பு, இவருக்கு எந்த வேடமானாலும் பொருந்துகிறது. ஆனால் கல்கத்தா வரை இவரது நூற்றுக்கும் மேற்பட்ட அடியாட்களை கல்கத்தா வலரை கொண்டு வருவது லாஜிக்காக இல்லை. விஜய் ஆண்டனியின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் படியாய் இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
எங்கேயும் காதல் என்ற ரொமான்ஸ் படத்தை கொடுத்த பிரபுதேவா, வித்தியாசமாய் ஆக்ஷன் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார். கொல்கத்தாவில் நடுரோட்டில் அடித்து போட்டால் கேட்க ஆளில்லை. மீடியா இல்லை. போலிஸ் இல்லை. இவற்றையெல்லாம் நம்மால் நம்பமுடியவில்லை.
படத்தில் அதிக அளவில் தெலுங்கு வாடை வீசுவதால், வெடி குறைவான அளவிலேயே வெடிக்கும் எனலாம்.

No comments:

Post a Comment

my blog recent