Tuesday, September 27, 2011

80 வயதில் சிலம்பம் சுற்றிய பாட்டி! – மிரண்ட சூர்யா!

80 வயதில் சிலம்பம் சுற்றிய பாட்டி! – மிரண்ட சூர்யா!

7am arivu_surya
Published on Tuesday, 27 September 2011 12:03  Hits: 83


தீபாவளி வெளியீடாக வர இருக்கும் ‘7ஆம் அறிவு படத்திற்காக, சென்னையில்
நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சூர்யா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது சூர்யா பேசியதாவது;
``1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த போதி தர்மன் என்ற தற்காப்பு கலைஞனை பற்றிய கதை இது. இதில், விஞ்ஞானமும் கலந்து இருக்கிறது.
போதி தர்மனை, பாதி உலகம் கடவுளாக கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போதி தர்மனை பற்றிய தகவல்கள் அழிக்கப்பட்டு விட்டன. அவருடைய புகழ் மறக்கடிக்கப்பட்டு விட்டதால், யாரும் இதுபற்றி படம் எடுக்கவில்லை. அவரை பற்றிய புத்தகங்களை படித்துவிட்டு, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கமின்றி தவித்தார்.
பின்னர் இவரைப் பற்றி படமெடுக்க முடிவு செய்தோம். நான் அதற்கு என்னை தயார்படுத்திக் கொள்வதற்காக, சில தற்காப்பு கலைகளில் பயிற்சி பெறுவதற்காக வியட்நாம் சென்றேன். அங்கே 80 வயது பாட்டி, சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார். மிரண்டு போனேன்.
7ஆம் அறிவையும் ரசிகர்கள் மிரளும்படி ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கி இருக்கிறார்.’’ என்றார்.

No comments:

Post a Comment

my blog recent