செல்ஃபோன் விளம்பரத்துக்கு விஜய் வாங்கிய சம்பளம்!
- Details
- Published on sep 30
நடித்து வருமானம் ஈட்டுவதை விட விளம்பரத்தில் நடித்து வருமானம்
ஈட்டுவதில் மாஸ் ஹீரோக்கள் கில்லாடிகளாக இருகிறார்கள்
.
ரஜினி, கமல், அஜித், விஷால் ஆகிய மூன்று பெரிய ஹீரோக்கள் மட்டும்தான் விளம்பரத்தின் பக்கம் எட்டிப்பார்க்க வில்லை.
7ம் அறிவு மேலும் புதிய படங்கள்
வர்ணம் திரைப்பட பாடல் ட்ரெயிலர் வீடியோ
7ம் அறிவு மிரட்டும் ட்ரெயிலர் HD
கோலிவுட்டைப் பொருத்தவரை, பிரபல பிராண்டுக்கு ஒரு ஆண்டுக்கான விளம்பர அம்பாசிடராக இருக்க இன்றைய தேதிக்கு ஹையஸ்ட் பெய்ட் ஹீரோ என்றால் சூர்யா.
இரண்டாவது இடத்தை இன்னும் தக்க வைத்திருகிறார் த்ரிஷா.! இவர்களுக்கு பிறகுதான் மற்றவர்கள் என்ற நிலை இருந்ததை தற்போது இளைய தளபதி விஜய் உடைத்திருகிறார்.
சூர்யா ஏர்செல் நிறுவனத்துக்கு விளம்பர அம்மாசிடராக இருந்தபோது 4 கோடி ஊதியம் வாங்கினார் என்கிறார்கள். பிறகு அவரது தம்பி கார்த்தி ஏர்டெல் விளம்பர அம்மாபாசிடராக தற்போது இருந்து வருகிறார்.
இதற்கு அவருக்கு 3 கோடி வழங்கப்பட்டதாம். தற்போது ஜோஸ் அலுகாஸ் நகைக்கடை விளம்பரத்தில் தோன்றி வந்த விஜய் அதற்காக வாங்கிய தொகை குறைவுதான் என்றாலும் தற்போது டாடா டோகோமோ பிராண்ட் அம்பாஸிடராக ஒராண்டு ஒத்துழைப்பு தர அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தொகை ஐந்துக்கோடி என்கிறார்கள்.
தற்போது இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டு இருக்கிறார் விஜய். இந்த ஆண்டு இறுதிக்குள் தீக்ஷா சேத்துடன் மேலும் ஒரு டாடா டோகோமோ விளம்பரத்தில் நடிக்க இருகிறாராம் விஜய். அடுத்த ஆண்டு கவுதம் மேனன் இயக்க இருக்கும் படத்துக்கு யோகன் முதல் பாகத்துக்கு மட்டும் 11 கோடி சம்பளம் பேசப்பட்டிருகிறதாம் விஜய்க்கு!
No comments:
Post a Comment