Sunday, September 25, 2011

ஆபிரிக்கர்களா? அவுஸ்திரேலியர்களா? பூர்வப் பழங்குடி – முரண்பாடான ஆய்வு முடிவு

ஆபிரிக்கர்களா? அவுஸ்திரேலியர்களா? பூர்வப் பழங்குடி – முரண்பாடான ஆய்வு முடிவு

அவுஸ்திரேலியப் பூர்வகுடிகளின் வாழ்க்கையைப் பற்றி அறிய ஒரு தலைமயிர்க் கற்றை விஞ்ஞானிகளுக்கு உதவியுள்ளது. இது உலகெங்கிலும் மனிதன் பரம்பலடைந்த வரலாற்றை மீள எழுதவும் வழிவகுத்துள்ளது.

 தலையிரிலிருந்து எடுக்கப்பட்ட ஓர் உயிரணுவானது 70,000 ஆண்டுகளிற்கு முன்னர் நவீன மனிதர்களிலிருந்து பிரிந்த முதல் பிரிவினராக அவுஸ்திரேலியப் பூர்வகுடிகள் இருந்தனரென விளக்குகின்றது.
இது ஆபிரிக்காவிலிருந்து பிரிந்த தனியான நகர்வுக் கட்டத்தின் தற்போதைய கொள்கைகளுக்குச் சவாலாகவே உள்ளது.
பூர்வகுடிகளின் பாதையைத் தொடர்ந்துசென்றதில் ஆசியாவினைக் கடந்து அவுஸ்திரேலியாவிற்குள்தான் அவர்களது சனத்தொகை அதிகளவில் காணப்பட்டாலும் எஞ்சியவர்கள் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் 24,000 வருடங்களின் முன்னரே தங்கியுள்ளார்களெனப்படுகின்றது.
அப்போதுதான் அவர்கள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரவி குடிகளாக வாழ்ந்தனர். ஆனால் 25,000 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் பூர்வகுடிகள் தமது இருப்பை நிரந்தரமாக்கிக்கொண்டனர் என்கின்றனர்.
இதனால் ஏனைய வேறு இனக்குழுவினரைவிடவும் அவுஸ்திரேலியப் பூர்வகுடிகளுக்கே நிலத்தைச் சொந்தங் கொண்டாடக்கூடிய அதிக உரிமை உள்ளதென்கின்றனர்.
50,000 வருடங்களளவில் அவுஸ்திரேலியாவில் பூர்வகுடிகள் வசித்துவந்திருக்கலாமென்று அறியப்படுகின்றது. எனினும் இக்குடிகளின் பயணம் மற்றும் ஆசியா, ஐரோப்பாவைச் சேர்ந்த மக்களுடனான இவர்களின் தொடர்புகள் பற்றி எதுவும் அறியப்படவில்லை.
ஒரே தடவையில்தான் ஆபிரிக்காவும் மத்திய கிழக்கும் ஒரேமாதிரியான மக்களாலும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் ஆசியா மற்றும் அவுஸ்திரேலியர்களிலிருந்து பிரிந்துவந்திருக்கலாமென்றும் முதலில் எண்ணப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு பூர்வகுடியின் தலைமயிர்க் கற்றையிலிருந்து அவுஸ்திரேலியர்கள்தான் முன்னர் வாழ்ந்தவர்கள் என்று அறியப்படுகின்றது. இதன்மூலம் 70,000 வருடங்கள் முன்னரே அவுஸ்திரேலியர்கள் பிரிக்கப்பட்டனர் என விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

HOME 

No comments:

Post a Comment

my blog recent