கூகுல் வரைபடத்தில் முதல் முதல் இணைந்துள்ள சுதந்திர நாடு
கூகிளின் வரைபடத்தில் புதிய சுதந்திர நாடான தென்சூடானின் வரைபடம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை யாகூ தளத்திலோ மைக்ரோசொப்ற் மற்றும் தேசிய புவியியல் வரைபடங்களிலோ இன்னும் காணமுடியவில்லை.
2 மில்லியன் மக்கள் இறந்து இறுதியில் இவ்வருட யூலை மாதத்தில் தென்சூடான் சுதந்திரமடைந்தது.
வோசிங்ரனில் வசிக்கும் தென்சூடானின்
பத்திரிகையாளர் ஒருவர் Change.org என்ற தளத்திற்கு வேண்டுகோள் ஒன்றை
விடுத்ததன்மூலம் இது கூகிள் வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இதையிட்டுத் தென்சூடான் மக்கள் தமது புதிய நாட்டினைப் பற்றிப் பெருமையடைவார்கள் என்றார் அவர்.
ஏனைய ஒன்லைன் தளங்களும் இப்புதிய வரைபடத்தினை இணைத்துக்கொள்ளுமென நம்புவதாக அப்பத்திரிகையாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment