உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள -2 !!!
கீலாகர்ஸ் என்பவை உங்கள் கணினியில் நிறுவப்பட்டு நீங்கள் தட்டச்சு செய்யும் விசைகளை ஒரு பைலாக சேமித்து அதை மற்றொரு நபருக்கு அனுப்புவதாகும்.கீலாகரில் இரண்டு வகைகள் உள்ளன, அவை
- Hardware Keyloggers
- Software Keyloggers
1)Hardware Keyloggers:
வன்பொருள்(ஹார்ட்வேர்) கீலாகர்ஸ் என்பவை உங்க்ள் கணியின் கீபோர்டின் கனெக்க்டரில் அதே போன்ற வேறொன்றை இணைத்துவிடுவதுதான். இந்த இணைக்கப்பட்ட கீலாகரானது தானாகவே தகவல்களை இணையம் வழியாக அதனை இணைத்தவருக்கு அனுப்பிக்கொண்டிருக்கும்..
ஹார்ட்வேர் கீலாகர்ஸ் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம், இது வன்பொருளாக இருப்பதால் எந்த ஆன்டி-வைரஸ், ஸ்பைவேர் மென்பொருட்களாலும் கண்டுபிடிக்க முடியாது.
வன்பொருள் கீலாகர் (படம்:கூகுள்) |
இது கிட்டத்தட்ட கீபோர்டினை கனெக்ட் செய்யும் பின்னை போன்றே இருப்பதால் நீங்கள் பார்த்தாலும் தெரியாது. எனவே இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் கணியினை மற்றவரிடம் விட்டுவிட்டு நீங்கள் 2 நிமிடம் வெளியில் சென்றாலே அவர்கள் இந்த கீலாகரை இணைத்து விடலாம்.
2)Software Keyloggers
சாப்ட்வேர்(மென்பொருள்) கீலாகர்ஸ் என்பவை மென்பொருள்களின் மூலம் உங்கள் கீபோர்டில் தட்டப்பட்ட விசைகளை ஒரு கோப்பாக சேமித்து அதில் முன்னரே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடும்.
எல்லா கீலாகர்களுமே பின்புலத்தில் இயங்குவதால் இவை டாஸ்க்பார் மற்றும் கண்ட்ரோல் பேனலில் தெரியாது. ஆனால் மென்பொருள் கீலாகர்ஸ் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் உங்கள் கணினி சற்று வேகம் குறைவாக இருக்கலாம், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்கள் டாஸ்க் மேனேஜரில் பார்த்து சந்தேகப்படும்படியான ப்ராசஸ்களை எண்ட் செய்துவிடவும்.
இதில் இரண்டு வகை உள்ளது:
- Physical Keyloggers
- Remote keyloggers
முதல் வகையானது யாராவது ஒருவர் நேரடியாக உங்கள் கணினியில் நிறுவுவது, அதாவது உங்கள் கணினியை பயன்படுத்தும்பொழுது உங்களுக்கே தெரியாமல் நிறுவி விட்டால் அதன்பின் நீங்கள் தட்டும் ஒவ்வொரு எழுத்தும் அவர் மின்னஞ்சலுக்கு செல்லும்.
இரண்டாவது வகை கீலாகர்ஸ் இணையத்திலிருந்து நீங்கள் ஏதேனும் தரவிறக்கம் செய்யும்போது அதனுடன் சேர்ந்து உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும், இவை அதிகமாக குறிப்பிட்ட நபரை குறிவைத்து நடப்பதில்லை, பலரின் தகவல்களை திருட வேண்டும் என்ற நோக்கில் விரிக்கப்படும் வலை.
பாதுகாப்பு வழிமுறைகள்:
- கீலாகர்ஸிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொளவது சற்று கடினம். கீலாக்ர்ஸிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தலாம்.
- பெரும்பாலான கீலாகர்கள் ஒரு குறிப்பிட்ட விசைகளைத்தான் அவற்றை திறப்பதற்கு பயன்படுத்துகின்றன, ctrl + alt + shift + k என்ற விசைகளை அழுத்தி பாருங்கள், உங்கள் கணினியில் கீலாகர் நிறுவப்பட்டிருந்தால் ஒரு விண்டோவ் தோண்றி கடவுச்சொல் கேட்கும், இதிலிருந்து கீலாகர் நிறுவப்பட்டுள்ளதை அறியலாம்.
- நிறுவப்பட்டுள்ள கீலாகரை அந்த கடவுச்சொல் இல்லாமல் நீங்கள் எந்த வகையிலும் அழிக்கவோ நீக்கவோ முடியாது, உங்கள் ஹார்டு டிஸ்கினை ஃபார்மட் செய்வதே ஒரே வழி.
- சில கீலாகர்கள் மேலே குறிப்பிட்ட விசைக்கு பதிலாக வேறு விசைகளை பயன்படுத்தவில்லை என்றால் நம்மால் அதனை கண்டுபிடிக்க முடியாது.
- உங்கள் ஃபயர்வால் எனேபிள் செய்யப்பட்டிருப்பதன் மூலம் கீலாகர்ஸ் இணையத்தின் வழியே தகவல் அடுப்பதை ஓரளவு தடுக்கலாம், ஆனால் இதுவும் ஒரு முழுமையான பாதுகாப்பினை தராது.
- சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது கீலாகர்ஸ் பின்புறத்தில் வேலை செய்துகொண்டிருப்பதை கண்டுபிடிக்கும் ஆற்றலை கொண்டிருக்கும், நான் AVG, AVIRA மற்றும் AVAST ஆன்டி-வைரஸ்களில் சில கீலாகர்ஸை நிறுவி சோதித்தபோது AVG கீலாகர்ஸ் இருப்பதாக எச்சரிக்கை செய்தது, அவாஸ்ட் ஒரு மென்பொருளுக்கு மட்டுமே எச்சரிக்கை தந்தது மற்றவற்றிற்கு தரவில்லை, அவிரா எதற்குமே எச்சரிக்கை தரவில்லை.
- க்ராக் செய்யப்படும் மென்பொருட்கள், முக்கியமாக டோரண்டிலிருந்து தரவிறக்கப்படும் மென்பொருட்களில் கீலாகர்ஸ் மறைந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது, எனவே அதனை தவிர்க்கவும்.
- நெட்வொர்க் மானிட்டரிங் மென்பொருட்களை நிறுவி கண்கானிப்பதன் மூலம் கீலாகர்ஸ் இணையத்தில் தொடர்பு கொள்வதை கண்டுபிடிக்கலாம்.
- பொது இடங்களிலும் வீட்டிலும் கடவுச்சொல்லை தட்டச்சு செய்ய ஆன்-ஸ்கிரீன் கீபோர்டினை பயன்படுத்துங்கள், விண்டோஸில் இதனைப்பெற OSK என்று ரன் கம்மாண்டில் டைப் செய்யவும்.
- சில மென்பொருள் கீலாகர்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் கீலாகர்கள் ஆன்-ஸ்கீரின் கீபோர்டுகளில் டைப் செய்யப்படுவற்றையும் கண்டுபிடித்து விடும்.
- பொது இடங்களில் அல்லது மற்றவரது கணினிகளை பயன்படுத்தும்போது ஒன்-டைம் பாஸ்வேர்ட் எனப்படும் வசதியினை பயன்படுத்தவும்.
- கடவுச்சொல்லை தட்டச்சு செய்யுமுன் தேவையற்ற சில எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டு, அதனை மவுசால் செலக்ட் செய்துகொண்டு பின்னர் உங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யவும்.இவையே கீலாகர்ஸிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்.
நான் எனக்கு தெரிந்தவரை கீலாகர்ஸ் பற்றி எழுதியிருக்கிறேன், இதில் தவறுகளும் இருக்கலாம் இல்லை ஏதேனும் விட்டுப்போயிருக்கலாம், தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள். அடுத்த பகுதியில் இப்போது புதிதாக பிரபலமடைந்து வரும் ஆபத்தான ஹாக்கிங் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
No comments:
Post a Comment