உஷார்!!! நூதன பெட்ரோல் திருட்டு...
நேற்று
மதியம் ஒரு பெட்ரோல் பங்கில் சென்று இரண்டு லிட்டர் பெட்ரோல் போடச்
சொன்னேன், அவரும் நல்லாதான் போட்டாரு, மீட்டர் ஓடிட்டே இருக்கு ஆன டேங்க்ல
பெட்ரோல் விழுற சத்தமே கேக்கல, என்னடா சத்தமே கேக்கலையேனு அந்த பையன்கிட்ட
கொஞ்சம் அந்த பைப்ப மேல தூக்கி போடுங்கனு சொன்னேன், அவரு சொன்னாரு மேல
தூக்குனா பெட்ரோல் ஆவியாயிடும்னு சொன்னாரு, இந்த விஷயம் எங்களுக்கும்
தெரியும் தூக்குங்கனு அந்த பைப்ப மேல தூக்கி பாத்தா அந்த பைப்ல இருந்து
பெட்ரோல் ஒரு துளி கூட வரல ”வெறும் காத்துதேன் வருது” ஆனால் பெட்ரோல்
மீட்டர் ஓடிட்டே இருக்கு, வந்திச்சு பாருங்க வெறி அவன் சட்டைய
பிடிச்சுகிட்டு நான் போட்ட சத்தத்துல அங்க ஒரு பெரிய கூட்டமே கூடிடுச்சு,
எனக்கு முன்னாடி பெட்ரோல் போட்ட ஒரு 5,6 பேரு அவங்களும் டேங்க் தொறந்து
பாத்தா அவங்களுக்கும் இதேதான் பண்ணிருக்கான், அப்புறம் என்ன அங்க உள்ள
கேஷியருக்கு தர்ம அடி கெடச்சது,அங்க இருந்த ஒருத்தர் போலீஸ்கிட்ட போவோம்னு
சொல்லிட்டுருந்தாரு ஆனால் எனக்கு அவசர வேலை இருந்ததால நான் அந்த இடத்துல
இருந்து கெளம்பிட்டேன், அத பார்த்ததுல இருந்து மனசுக்குள்ள வடிவேல் டயலாக்
கேட்டுகிட்டே இருக்கு,”எப்புடியெல்லாம் டெவலப் ஆயி போயிகிட்டு இருக்கானுங்க
பாருய்ய இவனுங்க.”
நீங்க இனிமேல் அந்த பைப்ப மேல தூக்கி பிடிச்சு பெட்ரோல் போட சொல்லுங்க, 100 மிலி ஆவியாகுதுனு நாம பாத்தா அவனுங்க பெட்ரோலே போடாம காசு புடுங்குறானுங்க, உங்களுக்கு தெரிஞ்ச வேற பெட்ரோல் திருட்டு வழிமுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க, எல்லாருக்கும் தெரியட்டும்.

No comments:
Post a Comment