Tuesday, October 4, 2011

பதிவர்களுக்கு தேவையான முக்கிய குறிப்பு...!

பதிவர்களுக்கு தேவையான முக்கிய குறிப்பு...!

ணக்கம் நண்பர்களே, அனைத்து பதிவர்களுமே தமிழில் பதிவிட ஏதோ ஒரு மென்பொருளை பயன்படுத்துகிறோம், இந்த மென்பொருட்கள் எல்லாம் கீபோர்டில் ஏதேனும் இரண்டு கீக்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யும் மொழியினை மாற்றிக்கொள்ளும்படி இருக்கும்.

     உதாரணத்திற்கு நான் NHM Writer உபயோகிக்கிறேன், அதில் தமிழ் மொழிக்கு மாற்றுவதற்கு Alt+2 கீயை அமைத்திருக்கிறேன், ஆனால் பதிவின் நடுவில் ஆங்கில வார்த்தைகள் வரும்பொழுது மீண்டும் மீண்டும் Alt+2 அழுத்தி மொழிகளை மாற்றுவது (http://vigneshms.blogspot.com) மிகவும் எரிச்சலூட்டுவதாக உள்ளது, நான் பதிவிடுவதற்கு படும் கஷ்டத்தை விட இவ்வாறு மொழி மாற்றி டைப் செய்வதிலேயே சோர்வடைகிறேன். இதனை தவிர்க்க ஒரு புதுவழியினை முயன்று பார்த்தேன், வெற்றி கிடைத்துவிட்டது.

     நீங்கள் பதிவினை ஆரம்பிக்கும்போதே உங்கள் On-Screen Keyboard ஐ திறந்து கொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் தமிழ் எழுதியில் தமிழினை செட் செய்து கொண்டு தமிழில் எழுதுங்கள், எங்கெல்லாம் ஆங்கில வார்த்தைக்கான தேவை வருகிறதோ அங்கெல்லாம் On-Screen Keyboardனை உபயோகித்து ஆங்கிலத்தை டைப் செய்திடுங்கள் விண்டோசில் இந்த கீ போர்டானது மிதக்கும் விண்டோவாக இருக்கும், அதாவது On-Screen Keyboard அனைத்து விண்டோக்களுக்கும் (http://vigneshms.blogspot.com) மேலேயே இருக்கும், நாம் நமது ஆக்டிவி விண்டோவில் வேலை செய்யலாம், ஆன் ஸ்கிரீன் கீபோர்ட் மினிமைஸ் ஆகாது தொந்தரவும் செய்யாது..

     விண்டோசில் On-Screen Keyboardனை திறக்க Start-->All Programs-->Accessories-->On-Screen keyboard என்பதை செலக்ட் செய்யுங்கள் அல்லது ரன் கம்மாண்டில் OSK என்று டைப் செய்து எண்டர் தட்டுங்கள்.

இன்னொரு முக்கிய குறிப்பு:

     நாம் அனைவருமே நமது இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்பவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றே நினைக்கிறோம், அதற்கு பலவழிகளை பயன்படுத்துகிறோம், நான் டெக்ஸ்ட் செலக்‌ஷன் செய்ய முடியாத அளவுக்கு டிஸேபில் செய்திருந்தேன் ஆனால்(http://vigneshms.blogspot.com) இங்கே சில இடுகைகளில் உள்ள ஸ்கிரிப்டுகளை காப்பி செய்ய முடியவில்லை என்று பயனர்கள் சொன்னதால் அதனை நீக்கிவிட்டேன், எனக்கு என் இடுகையை யாரும் காப்பி செய்யக்கூடாது என்று எண்ணமில்லை என் பெயரை குறிப்பிட்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் ஆனால் சொந்தமாக எழுதியதைப் போல பயன்படுத்துவதே தவறு. அநேகமாக எல்லாப் பதிவர்களுக்கும் இதே போன்ற எண்ணங்களே இருக்கும்.

     காப்பி பேஸ்ட் செய்பவர்களும் ஒன்றும் மோசமானவர்களில்லை, நீங்கள் என்ன எழுதுகிறீர்களோ (http://vigneshms.blogspot.com)அதை அப்படியேதான் போடுவார்கள், எடிட் செய்யமாட்டார்கள். அப்படியானால் நாம் என்ன செய்யவேண்டும் நமது இடுகைக்குள் இரண்டு மூன்று இடங்களில் நமது பதிவின் முகவரியை கொடுத்துவைக்க வேண்டும், நான் இந்த இடுகையில் அதைத்தான் செய்திருக்கிறேன்.. இதை காப்பி செய்பவர்கள் நிச்சயம் என் பதிவின் முகவரியை நீக்கமாட்டார்கள். எனவே நமது இடுகை பிரபலமாவதோடு நமது முகவரியும் பலருக்கு கிடைக்கும்..
அதற்காக ஒரே இடுகையில் ஓவராக முகவரியினை கொடுத்துவைக்காதீர்கள் அது படிப்பவர்களையும் (http://vigneshms.blogspot.com)எரிச்சலூட்டலாம்...:-)

ஜோக்:
மிருகக்காட்சி சாலையில் புலி ஒருவனை அடித்துக் கொன்றுவிட்டது,
பக்கத்திலிருந்த குரங்கு கேட்டது “ஏன் அவனை கொன்ன?” என்று...
அதற்கு புலி சொன்னது “அவன் 3 மணிநேரமா என்னை பாத்து சொல்றான்
எவ்வளோ பெரிய பூனைன்னு, நானு எவ்வளவுதான் பொறுத்துக்குறது”..

No comments:

Post a Comment

my blog recent