Friday, October 7, 2011

உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு

உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு
sep 7,2011

Share:


புதுதில்லி: சீனாவில் முதல்முதலில் இதன் விற்பனை துவங்கியது. தற்போது, இந்திய மாணவர்களுக்காக மிகக் குறைந்த விலையில் கையடக்க கணினி டேப்ளட் இன்று முதல் சந்தைக்கு வருகிறது.

இங்கிலாந்து நிறுவனமான டேடாவைண்ட் நிறுவனம், சீனாவில் தனது நோட்புக்குகளை அதிக அளவில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்திய சந்தையைக் குறிவைத்து இந்த நிறுவனம் அதிக அளவில் நோட்புக்குகளைத் தயாரிக்கவுள்ளது. செகந்தராபாத்தில் தனது தொழிற்சாலையினைத் துவக்கி, இங்கேயே தயாரிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

ஒவ்வொரு நாளும் 700 கையடக்க கணினிகள் தயாரிக்கப்படும் என்றும், போகப்போக இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அரசின் ஒத்துழைப்பிருந்தால், 12 மில்லியன் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விக்கு பயனுள்ள வகையில் இது தயாரித்து அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது அந்த நிறுவனம்.

தற்போது முதல் 500 மாணவர்களுக்கு ரூ.2,276 என்ற விலையில் (49 டாலர்) தரப்படும். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ரூ.1,750 க்கும், அரசின் ஆதரவு கிடைத்தால், பின்னாளில் மானிய விலையில், ரூ.500க்கும் இதனை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாம்.

உங்கள் கருத்துக்கள்

Facebook Login

Share:


No comments:

Post a Comment

my blog recent