வேலாயுதம் - நம்ம ஊரு கிறீஸ் மனிதனின் காப்பியா?
நீங்க ஆயிரம் தான் சொல்லுங்க.. தமிழ் சினிமாவில சூப்பர் ஸ்டாருக்கு
அடுத்ததாக யாருக்கு மாஸ் அதிகம் எண்டு பார்த்தா.. அது இளைய தளபதி விஜய்க்கு
தான் என சின்ன குழந்தை கூட சொல்லும். அதற்கு ஏற்றது போல பல சம்பவங்கள்
ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
நேற்று தமிழ் இணைய உலகையும், சினிமா ரசிகர்களையும் “அட!” போட வைத்த விடயம் “வேலாயுதம் படத்தின் புதிய ட்ரெயிலர்”.
பேஸ்புக், ப்ளாக், ட்ருவிட்டர் என இதன் பாதிப்பு நேற்று அதிகமாகவே
காணப்பட்டது. இணையத் தளங்களும் சினிமா செய்திகளில் இந்த ட்ரெயிலர் பற்றியே
அதிகம் பேசின. அதற்கு காரணமும் இருக்கத்தான் செய்கின்றது. எல்லாம் ட்ரெயிலர் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு.
ஒரு மாதத்திற்கு முன்பதாக ஏறக்குறைய ஒரு நிமிட அளவிலான வேலாயுதம் படத்தின் ட்ரெயிலர்கள் வெளியிடப்பட்டன. நான் கூட “சம்பந்தமே இல்லாமல் இந்த நேரத்தில் ட்ரெயிலர் எதற்கு?”
என ஏதோ ஒரு பதிவில் விசனப்பட்டிருந்தேன். எனக்கு அந்த ட்ரெயிலர்கள்
எதுவும் திருப்தி தரவில்லை. ட்ரெயிலரை வைத்து படத்தை முடிவு செய்து விட
முடியாத போதும் ட்ரெயிலர் மீது ஒரு எதிர்பார்ப்பு எப்பொழுதும் இருக்கும்.
அதுவும் மாஸ் ஹீரோக்களின் பட ட்ரெயிலர்களை பார்ப்பதற்கே பலர் தவம்
கிடப்பார்கள்.
மங்காத்தா ட்ரெயிலர் படு மிரட்டலாக இருந்தது. படமும் மிரட்டி விட்டது.
ஏழாம் அறிவு பட ட்ரெயிலரும் பலத்த எதிர்பார்ப்பை தூண்டியிருக்கின்றது.
ஆனால் வேலாயுதம் பட ட்ரெயிலர்கள் மட்டும் இதுவரை “சப்பென..” இருந்தது.
அந்த சோர்வை எல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கின்றது நேற்று வெளிவந்த புதிய
உத்தியோக பூர்வமான ட்ரெயிலர்.
ட்ரெயிலரை வைத்து படக் கதையை கூற முடியாவிட்டாலும் ஒளிப்பதிவு, பின்னணி
இசை, நடன அமைப்புக்கள், கலை, சண்டை, படத்தொகுப்பு என பலவற்றையும்
அனுமானித்துவிட முடியும். அந்த வகையில் வேலாயுதம் படம் எல்லாவற்றையும்
திறம்பட பூர்த்தி செய்திருக்கின்றது.
இன்னும் இருபது நாட்களில் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சிறுவர்களுக்கு
ஒரு பெரு விருந்து காத்திருக்கின்றது. எல்லோருமே தீபாவளிக்கான நாட்களை
எண்ணிக் கொண்டு இருக்கின்றோம்!
வேலாயுதம் படத்தில் விஜய் “சூப்பர் ஹீரோவாக” வருவது எல்லோருக்கும்
தெரியும். இவர் கை மணிக்கட்டு கணுக்களில் இருந்து வாள்(அல்லது கத்தி)
வருவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர்
வரை களோபரத்தை ஏற்படுத்திய கிறீஸ் மனிதர்களும் கைகளில் கூரான ஆயுதங்களைப்
பொருத்தி இருந்தார்கள் என செய்திகள் வெளிவந்தன. அதற்கு வேலாயுதத்திற்கும்
ஏதாவது தொடர்புகள் இருக்குமோ என உட்கார்ந்து யோசித்துப் பார்த்தேன்.
எதுவுமே பிடிபடவில்லை. நீங்களாச்சும் சொல்லுங்களன்…
No comments:
Post a Comment