Thursday, October 6, 2011

அப்பிளின் துணை நிறுவுனர் Steve Jobs காலமானார்

அப்பிளின் துணை நிறுவுனர் Steve Jobs காலமானார்

அமெரிக்கத் தொழினுட்ப வல்லரசனான அப்பிளின் முன்னாள் முதன்மை நிர்வாகியும் துணை நிறுவுனருமான Steve Jobs தனது 56 ஆவது வயதில் காலமானார்.
Steve Jobs இன் புத்திசாதுரியமும் வேட்கையும் சக்தியுமே எண்ணற்ற படைப்புகளை உருவாக்கியிருந்ததோடு எமது வாழ்க்கையையும் முன்னேற வைத்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
Steve Jobs இன் மறைவையிட்டு இந்த உலகம் மிகவும் வேதனைப்படுகின்றது என அப்பிள் நிறுவனம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

இவரது மறைவு எதிர்கால சந்ததிக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதோடு தாம் அவருடன் வேலைசெய்ததையிட்டுப் பெருமைப்படுவதாகவும் மைக்ரோசொப்ற்றின் பில் கேற்ஸ் தனது இரங்கலுரையில் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது இரங்கலுரையில் தானும் தனது மனைவி மிக்கேலும் Steve Jobs இன் மறைவையிட்டுப் பெரிதும் வேதனைப்படுவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்களில் சிறந்த ஒருவர்  Steve Jobs என்றும் வித்தியாசமான வழிகளில் சிந்தனை செய்து உலகைத் தன்னால் மாற்றமுடியும் என்று உறுதியாக நம்பிய ஒருவர் என்றும் கூறினார்.
எடிசன் மற்றும் ஐன்ஸ்ரின் போன்றவர்களைப் போல நினைவில் வைத்திருக்க வேண்டிய ஓர் அமெரிக்க கண்டுபிடிப்பாளரைத் தாம் இழந்துள்ளதாக நியூயோர்க்கின் மேயர் குறிப்பிட்டார்.
2004 இல் தான் நிணநீர்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜொப்ஸ் அறிவித்திருந்தார்.
இந்த வருட ஜனவரியில் இவர் மருத்துவ விடுமுறை எடுத்துக்கொண்டு ஓகஸ்ற்றில் தனது முதன்மை நிர்வாகிப் பதவியிலிருந்தும் விலகி ரிம் குக்கிடம் கையளித்திருந்தார்.
இவரது இறப்பு அப்பிள் நிறுவனம் தனது iPhone 4S இனை வெளியிட்ட ஒரு நாள் கழித்து நிகழ்ந்துள்ளது.
Steve Jobs தான் iMac கணினி, iPod மற்றும் iPhone ஆகியவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
அப்பிளை 1970 இல் இவர் கண்டுபிடித்து அதற்கு நிர்வாகியாகவும் இருந்து வேறெந்தவொரு தலைவரைவிடவும் அதிககாலம் வர்த்தக உலகில் உலாவியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அப்பிளின் சந்தைப் பெறுமதி 351 பில்லியன் (227பில்.) ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது உலகின் மிகவும் பெறுமதிமிக்க தொழினுட்ப நிறுவனமாக உள்ளது.

No comments:

Post a Comment

my blog recent