ஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்பது எப்படி?
இன்று
பேஸ்புக் கணக்கு வைத்திருக்காதவர்களே இருக்கமுடியாது. அந்தளவுக்கு
பேஸ்புக் பிரபல்யம் பெற்றுள்ளது. எந்தளவுக்கு பிரபல்யமாகியுள்ளதோ
அந்தளவுக்கு திருட்டு வேலைகளும் அதிகரித்துள்ளது. பேஸ்புக் கணக்கு
திருடப்படுவது குறித்து பேஸ்புக் பாவனையாளர்களே! எச்சரிக்கை எனும் தலைப்பில் கடந்த பதிவில் விரிவாக எழுதியிருந்தேன்
இன்று பார்க்கப்போவது திருட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றி.
பேஸ்புக்
கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் விரும்புவது அதிக நண்பர்களை
சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே. எம் துறை சார்ந்தவர்களையும் , எமது
ரசனையுள்ளவர்களையும் நாம் அதிகம் நண்பர்களாக்கிக் கொள்வோம். இவ்வாறான
நண்பர்களில் பெரும்பாலானவர்களை எமக்கு தெரிந்திருக்காது. யார் யார்
உண்மையானவர்கள்? யார் போலியானவர்கள்? என்று எமக்கு தெரிவதில்லை. இவர்களில்
பலர் வீண் வேலைகளில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
அதிலும்
பல ஆண்கள் பெண்களுடைய பெயரில் கணக்கை வைத்திருந்து தகாத செயல்களில்
ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர பல வேண்டத்தகாத நபர்கள் போலிப்பெயர்களுடன்
விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு எமக்கு சிரமத்தை கொடுப்பார்கள்.
இவ்வாறானவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது?
மிகவும் இலகுவானது.......
ஆனால்
குறித்த நபர் உங்கள் நண்பர் பட்டியலில் இருக்க வேண்டும். அவ்வாறு
இருந்தால் அவருடன் சிறிது நேரம் அரட்டை அடியுங்கள். அதற்கு முன்னர்,
பேஸ்புக்கை தவிர ஏனைய அனைத்து தளங்களையும் மூடிவிடுங்கள்( வேறு தளங்கள்
திறந்து இருந்தால் மட்டும்). முடிந்தால் குக்கீஸ் மற்றும் உலாவியின்
History போன்றவற்றையும் அழித்துவிடுங்கள்.
குறித்த நபருடன் அரட்டையில் ஈடுபட்டவாறே ‘Command Prompt‘ ஐ திறவுங்கள். (Start >Run>cmd)
அதன் பின்னர் Command Promp இல் netstat -an என்ற
கட்டளையை கொடுத்து எண்டர் பண்ணுங்கள். அவ்வளவுதான். இப்போது உங்களுடன்
தொடர்பில் உள்ளவரின் IP Address காட்டப்படும். பின்னர் அதை IP Address Trace பண்ணும் இணையங்களில் கொடுத்து அந்த நபர் பற்றிய விபரங்களை பெற்றிடுங்கள்.
IP Address Trace தளம்
No comments:
Post a Comment