Friday, October 7, 2011

love pain

இமைப்பதை வெறுக்கிறேன் 

இமைப்பதை வெறுக்கிறேன்
என் அவள்
உருவம்
இமைக்கையில்
மறையும் ..
என்று......

இமைப்பதை வெறுக்கிறேன் - காதல் கவிதை

  என் சந்தோசம் நீ.... 

நீ...
"அருகில்"
இருந்த போது
தெரியவில்லை.!

உன்னை...
"பிரிந்த"
பின்பு தான்
தெரிந்து கொண்டேன்.!!

நான்...
"தொலைத்த"

என்...
"சந்தோசத்தை"...



மௌனம் பேசும் 

மௌனம் ஒருநாள்
பேசுமென்றால்
அது அவளின்
இதயம் என்னிடம்
காதல் சொல்லும் நாள்! 

புரியவில்லையா - காதல் தோல்வி கவிதைகள்

புரியவில்லையா 

என் கண்கள் சிந்தும்

கண்ணீர்த்துளிகளை பார்த்துமா

உனக்கு புரியவில்லை....

உன் நினைவின் வலியால்

என் இதயம் எப்படி

துடிக்கிறது என்று...................

பெண்ணே 555  - காதல் தோல்வி கவிதைகள்

பெண்ணே 

பெண்ணே

என் கண்களுக்கு நீ
இமைகளாக இருந்து
என் கண்களை நீ காத்தாய்....

இன்று என்னைவிட்டு நீ பிரிந்தபோதும்
எனக்கு அழகூட மனமில்லை...

இமைகளாக இருந்து என்
கண்களை காத்த இமைகள்
நனைந்துவிடுமோ என்று....


நெருங்கி நான்..........  

நெருங்கி நான் விலகினேன்
தினம் தினம் கனவிலே
குழந்தைபோல் சிரிக்கிறேன்
குளிக்கும்போது அழுகிறேன்
உனக்கென்ன யோகம்தான்
உறவாலே தினம் தோன்றும்தான்
எனக்கென்ன நானும் நிலவுதான்
தினந்தினம் நான் தேய்பிறை 

எங்கே நான் போவது........? 

நீவிட்டுச் சென்றபோதும்
உனக்காக ஏங்கினேன்
விழித்திருந்த நேரமெல்லாம்
உன் நினைவோடு வாழ்கிறேன்
உறங்குகின்ற நேரமெல்லாம்
உறங்காது வாடினேன்
உயிர்விட்டு போ நீ என்றால்
உடனே நான் போகிறேன்
எனைவிட்டு போ நீ என்றால்
எங்கே நான் போவது........?


நீ திரும்பிநடந்து.......  

நீ திரும்பிநடந்து
திரும்பி பார்க்கையில்,
நான் தெருவெங்கும்
தொலைந்துபோகிறேன் .
மரம் உதிர்த்த இலைகள்போல்,
என்னை உதிர்த்துவிட்டு போவதேன்?
சுகமான கீதம் பாடவா?
சொந்தபந்தம் தேடவா?
சொற்பநேரம் இருந்தது இதுவரை
நீ சென்றாய் அதுவும் தொலைந்தது.


நான் தீயிலேரியும் வரை 

அருகில் இல்லாமல்
அகத்தில் இருந்து கொண்டு
அனுதினமும் உனை
அன்பால் நினைக்க செய்தவள் நீயடா

இன்னல் நிறைந்த வாழ்வை
இதமாக கொடுத்தவள் நீயடா
இருளில் நான் கிடக்கையிலே
இன்ப வார்த்தையால் ஒளி தந்தவள் நீயடா

முழுசாய் உனை நினைத்து
முற்றிலும் எனை மறந்து
துக்கத்தில் ஆழ்ந்து துயரத்தில் முழ்கி
துயில் கொள்ள மறுத்த என் விழிகளுக்கு

உன் தூய நினைவுகளை தந்து துயர்
துடைக்க செய்தவள் நீயடா
தவிப்புகளோடு நான் இருக்கையிலே
தாயென எனக்கு தாலாட்டு இசைத்தவள் நீயடா

சிந்திக்க நான் நினைக்கையிலே
உன் சிறு சிறு நினைவுகளை
சீற்றம் கொள்ளாமல் சிந்தியவள் நீயடா

தாய்க்கு பின் தாயாய் ஆனவளே
சிந்திய உன் நினைவுகளை
கவியெனும் திரையிட்டு காட்டுவேன்
நான் தீயிலேரியும் வரை................... HOME

No comments:

Post a Comment

my blog recent